பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு அக்டோபர் 26, 27-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.3 ஆயிரத்துக்கும் அதிகமான உபரி ஆசிரியர்கள் இருந்ததால், அவர்களைபணி நிரவல் செய்த பிறகே பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
பணி நிரவல் முடிக்கப்பட்டுள்ளதால், காலியாக உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு நடத்த பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மாவட்டத்துக்குள் இடமாறுதல் கலந்தாய்வு அக்டோபர் 26-ஆம் தேதியும், மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கான கலந்தாய்வு 27-ஆம்தேதியும் நடத்தப்பட உள்ளது. மேலும், உடற்கல்வி ஆசிரியர்கள் நிலை-2-இல் உள்ளவர்களுக்கும் இந்த நாள்களில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.30-இல் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு: இதேபோல், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோருக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு செய்வதற்கான ஆன்-லைன் கலந்தாய்வு அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.
No comments:
Post a Comment