Monday, October 19, 2015

kalvikural திடீர் மாற்றம் 'மொகரம்' விடுமுறை

           மொகரம்' விடுமுறை, 24ம் தேதி என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், தொடர் விடுமுறை பாதிக்கப்பட்டுள்ளது. இது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நாளை ஆயுத பூஜை; நாளை மறுதினம், விஜயதசமி. இரண்டு நாட்களும், அரசு விடுமுறை. அதைத் தொடர்ந்து, 23ம் தேதி, மொகரம் பண்டிகை வருவதால், 'அரசு விடுமுறை' என, அறிவிக்கப்பட்டிருந்தது. அடுத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் விடுமுறை என்பதால், தொடர்ந்து, ஐந்து நாட்கள் விடுமுறை வந்தது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்குஓவிய போட்டி

         அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 'புனித நதி' என்ற தலைப்பில், ஓவியப் போட்டி நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


10ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி விடை தெரியாத கேள்விகள்


         பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில், புத்தகத்திலேயே இல்லாத, புதிய கேள்விகள் இடம் பெற்றுள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில், 2014 - 15ம் கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்ற, 10.60 லட்சம் மாணவர்களில், 1.15 லட்சம் பேர், அறிவியல் பாடத்தில், 100க்கு, 100 எடுத்தனர். 2013 - 14ல், 69 ஆயிரம் பேர்; 2012 - 13ல், 38 ஆயிரம் பேரும், 'சென்டம்' எடுத்தனர்.


நவ., 28ல் தலைமை ஆசிரியர்கள் போராட்டம்


       பதவி உயர்வு முரண்பாடுகளை நீக்க வலியுறுத்தி, நவ., 28ம் தேதி, உண்ணாவிரத போராட்டம் நடத்த, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் முடிவு செய்துள்ளது.


ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு சரி செய்ய அரசு திட்டம்


போராட்டம் எதிரொலியாக, ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Sunday, October 18, 2015

விரைவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 604 விரிவுரையாளர்கள் நேரடி நியமனம் தேர்வு

பட்டதாரி ஆசிரியர்களுக்கு 26, 27- இல் இடமாறுதல் கலந்தாய்வு

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு அக்டோபர் 26, 27-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.3 ஆயிரத்துக்கும் அதிகமான உபரி ஆசிரியர்கள் இருந்ததால்அவர்களைபணி நிரவல் செய்த பிறகே பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.


Friday, October 16, 2015

4 திட்டங்களுக்கு ஆதார் அட்டையை பயன்படுத்த அனுமதித்து உச்சநீதிமன்றம்

முதியோர் ஓய்வூதியம், 100 நாள் வேலைவாய்ப்பு உள்ளிட்ட 4 சமூக திட்டங்களுக்கு ஆதார் அட்டையை விருப்பத்தின் பேரில் பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
  

மாணவர்களுக்கு சான்றுகள் வழங்க பள்ளிகள் ஒருங்கிணைப்பு மையம்

மாணவர்களுக்கான சான்றுகள் வழங்க, சில பள்ளிகளை ஒருங்கிணைத்து தனிமையங்கள் அமைத்து, 'ஆன்-லைனில்'சான்றுகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒரு அரசுப் பள்ளி ஆசிரியரின் கனவு!

பல வருடங்களாக வண்ணம் தீட்டப்படாத அழுக்கான கட்டிடங்கள்,காய்ந்த சருகுகள் ,புல் ,சிறிய புதர்கள் நிரம்பிய வளாகங்கள், பராமரிக்கப்படாத மாணவர் கழிப்பறைகள்....இவை பெரும்பாலான அரசுப்பள்ளிகளின் இன்றைய அடையாளங்கள். நகர்ப்பகுதியில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியில் படிக்கும் மாணவியிடம் பேசியபோது அவர் சொன்ன கருத்துக்கள் இவை..

ஆதார் அட்டை முழு முக்கியம் பெறுகிறது.

ஆதார் அட்டை அவசியம் குறித்து சுப்ரீம் கோர்ட் இன்று முக்கிய உத்தரவுபிறப்பித்துள்ளது. இதன்படி மேலும் மத்திய அரசின் 4 திட்டங்களுக்கு ஆதார் அட்டை அவசியமாகிறது.

Thursday, October 15, 2015